மாளிகாவத்தைப் பிரதேச மத்திய கொழும்பு வைத்தியசாலை மலசலக்கூடத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 67 வயதான குறித்த பெண் சிகிச்சைக்காகவே இந்த வைத்தியசாலைக்கு வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பெண்ணுக்கு, அதிகமாக இரத்தக்கொதிப்பும், நீிரிழிவு நோயும் காணப்பட்டதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் குறித்தப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரரணைகளை மாளிகாவத்தைப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.