பெண் குழந்தைகள் அறிய வேண்டிய Good Touch, Bad Touch

297

நம் தமிழர்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது நம் சமூதாயம், அதற்கு ஒரே ஒரு உதாரணம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமை.

சிறு வயதில் சுட்டியாக விளையாடிக் கொண்டு இருக்க வேண்டிய பெண் குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்து வளர்க்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.

அதிலும் அவர்களுக்கு தங்கள் உடலை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இன்றைய பெற்றோர்களுக்கு உள்ளது.

Good Touch

இதுபற்றி கூறும்போது மிகவும் கஷ்டப்பட வேண்டாம். குழந்தைகளுக்கு புரியும் அளவிற்கு சொல்ல வேண்டும், எந்த ஒரு டச் அவங்க ஈஸியா உணர வைக்குதோ அது குட் டச்.

உதாரணமா சொல்லனும் அப்படினா, அம்மா, அப்பா குழந்தையை கட்டி புடிச்சு கொஞ்சுறது, பிரண்ட்ஸ் கிட்ட செய்யிற ஹை ஃபைவ், ஷேக் ஹேண்ட்ஸ், உறவினர்கள் செல்லமா முத்தம் கொடுத்து கொஞ்சறது, எதுஎல்லாம் அவர்கள் அன்பாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறதோ, அது குட் டச்.

Bad Touch

அறிமுகமானவர்களோ, அறிமுகமற்றவர்களோ தேவையற்ற வேளையில் தேவையற்ற உடல் பகுதிகளில் தொடுவதும், அத்தொடுதலை மனதும் உடலும் விரும்பாததுமே பேட் டச்.

அதுபோன்ற ஆட்களை பார்த்தால் குழந்தைகள் பதற்றம் அடைவார்கள். அந்தத் தொடுதல் அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கும், மூட் அவுட் செய்யும், கவனமின்மையை உண்டாக்கும்.

வெளியிடங்களில் பாதுகாப்பு, இன்டர்நெட் பாதுகாப்பு, அறிமுகமற்றவர்களிடம் எப்படிப் பழகுவது இதுபோன்ற விஷயங்களையும் தெளிவாக பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

625.500.560.350.160.300.053.800.748.160.70

SHARE