பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு

445
வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2018ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வானது 2018.08.17ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமை தாங்கி தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு விவசாயம், சிறுகைத் தொழில் முயற்சி, சிறுகடை வியாபாரம், உணவு தயாரித்தல் மற்றும் கோழிவளர்ப்புக்கான வாழ்வாதர உதவிப் பொருட்களை வழங்கிவைத்தார்.
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், அமைச்சு மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
SHARE