பெண் நிருபரின் அழகை வர்ணித்ததற்காக அபராதம்

318
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கிண்டல் செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.கெய்ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் அவர் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் 15 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

அப்போது அவுஸ்திரேலியா தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் மெக்மெக்லின் கெய்லிடம் பேட்டி எடுத்தார்.

அப்போது அந்த பெண் நிருபரிடம் அழகை வர்ணித்த கெய்ல், போட்டி முடிந்த பிறகு மது விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். இதனால் பெண் நிருபர் அதிர்ச்சி அடைந்தார்.

கெய்லின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் பெண் நிருபரிடம் தகாத முறையில் பேசியதற்காக கிறிஸ் கெய்ல் மன்னிப்பு கேட்டார். கெய்லின் மன்னிப்பை ஏற்றுகொள்வதாக பெண் நிருபர் மெக்மெக்லினும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சக நாட்டு வீரர் பிராவோவுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை கெயில் இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கிண்டல் செய்யும் விதமாக ”என் பாக்கெட் காலியாக உள்ளது. எனவே இன்று இரவு உணவுக்கான பணத்தை பிராவோ கொடுக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

gayle_rep_002

 

SHARE