பெண் மீது துப்பாக்கிச் சூடு! இராணுவத்தினரிடம் விசாரணை

252

தந்திரிமலை – போகொட இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் பெண் ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தவறுதலாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவும் இதனடிப்படையிலேயே இராணுவத்தினரிடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தாயான குறித்தப் பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து தந்திரிமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்தப் பெண்ணின் உடல்நிலை சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE