பெண் வேடத்தில் இருப்பது இந்த நடிகரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

260

பிரபல நடிகர்கள் அவர்களின் பழைய படங்களில் பெண் வேடம் போட்டு நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கமல், ரஜினி, விக்ரம், விஜய், பிரசாந்த் என பலர் பெண் வேடம் போட்டு நடித்துள்ளனர். அவர்களை பார்த்தால் நம்மால் கண்டிப்பாக அடையாளம் காண முடியும்.

ஆனால் தற்போது பிரபல நடிகரின் பெண் வேட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது வேறு யாரும் இல்லை துருவங்கள் 16 என்ற ஹிட் படத்தில் நடித்த ரகுமானின் புகைப்படம் தான்.

1984ம் ஆண்டு வெளியான இத்திரி பூவே சுவன்னபூவே மலையாள படத்தில் ரஹ்மான் பெண் வேடம் போட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பெண் வேடம் போட்டது போல் இல்லை, நிஜமாகவே பெண் போன்று அழகாக இருக்கிறார் என்று தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

SHARE