பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நிறுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய உறுப்பினர் என்ற வகையில், தமக்கு தெரிந்த வரையில், அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.