சினிமாவில் 80, 90களில் நடிகர்கள் எல்லோருமே புதுசாக தான் சினிமாவிற்குள் நுழைந்திருப்பார்கள். ஆனால் இப்போது உள்ள சில நடிகர்கள் தங்களது அப்பா, அண்ணன் என பலரின் செல்வாக்கு வைத்து சினிமாவில் நுழைக்கின்றனர்.
ஆனால் அப்படி அவர்கள் பெயரால் சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு இடம் பிடிக்கவும் போராடும் நடிகர்கள் பலர் இங்கு. அப்படி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் முரளி.
இவரின் சித்தி மகன் தான் டேனியல் பாலாஜி என்பது பலருக்கு தெரியாத ஒரு விஷயம்.
இவர் தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களை அனுபவித்த போதும் முரளி பெயரை இதுவரை உபயோகித்ததே இல்லை. பல கஷ்டங்கள், பசி பட்டினியோடு வாய்ப்பு தேடி, இன்று நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் டேனியல் பாலாஜி.