பெரிய நடிகரை சந்தித்து கதை சொல்லிய இயக்குனர் சிவா

357

இயக்குனர் சிவா என்று கூறினாலே முதலில் நியாபகம் வருவது அஜித் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து தொடர்ந்து 4 படங்கள் கொடுத்துவிட்டார்கள்.

எல்லா படங்களையும் கொண்டாடிய மக்கள் கடைசியாக வந்த விஸ்வாசம் படத்தை ஏகபோகமாக வரவேற்றார்கள். அடுத்து சிவா யாருடன் கூட்டணி என்று பார்த்தால் சூர்யாவுடன் இணைகிறார் என்றும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றனர்.

இந்த நேரத்தில் தான் சிவா குறித்து ஒரு மாஸ் தகவல். அதாவது அவர் இன்று ரஜினியின் இல்லத்திற்கு சென்று ஒரு புதிய கதை சொல்லி இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் இவர்களது சந்திப்பு நடந்ததாக கூறுகின்றனர்.

 

SHARE