சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2,22,78,000 ரூபா பணம் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பட்டுள்ளார்.
குறித்த பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு நேற்று பிற்பகல் முயற்சித்த போதே சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.