நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றிய போது…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும் பெருந்தோட்ட மக்கள் பாரியளவில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொழிலாளர்கள் அடிமைகளாவதற்கு இடமளிக்கக் கூடாது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் கடமையாற்றி வருகின்றனர்.
தனியார் துறைக்கு வழங்கப்படும் 2500 ரூபா சம்பள உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இந்த சம்பள அதிகரிப்பு தொழிலுக்குச் செல்லும் நாள் என்று பிரித்து வழங்கப்படாமல் முழுமையாக வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை காரணம் காட்டி சம்பள அதிகரிப்பை வழங்காமல் இருக்கக் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருகின்றனர் எனவும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.