பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் – ஆனந்த அளுத்கமகே

251
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தனியார் துறைக்கான ஊதிய உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது தேர்தல் தொகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலம் முதல் இதுவரையில் ஆட்சி செய்த அனைத்து தரப்புக்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்றாந்தாய் அடிப்படையிலான சலுகைகளையே வழங்கி வந்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்க மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.  அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் களவெடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட மக்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றன சிறுத்தைகளினால் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விடயம் குறித்து வனப்பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.

தொழில் அமைச்சர் என்ற ரீதியில் ஜோன் செனவிரட்ன சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார் என ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

malaiyakam-720x480

SHARE