பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, கூட்டு உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 730ரூபா என்ற அடிப்படையில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக பெருந்தோட்டங்களின் உரிமைகள் கொண்டிருக்கும் நிறுவன தலைவர்களுக்கும் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பளம் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப்போராட்டங்களுக்கு முதன்முறையாக வடக்குகிழக்கு மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.