பெருந்தோட்ட மக்கள் தேயிலையை நம்பி இருக்காமல் மாற்று  திட்டத்திற்கு முன் வரவேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

241
பெருந்தோட்ட மக்கள் தேயிலை தோட்டத்தை மாத்திரம் நம்பி இருக்காமல் தேயிலை தோட்டங்களில் மாற்று பயிர் செய்கைகள் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அவ்வாறான நிலையிலேயே தோட்ட மக்களின் வருமானம் அதிகரிக்கும். உலக வர்த்தகத்தில் தேயிலையின் விலை வீழ்ச்சி தற்போது பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையை பாதித்து உள்ளது. தேயிலையை மாத்திரம் நம்பி இருக்காமல் இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்காது என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
யட்டியன்தோட்ட நகரில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நடமாடும் சேவையில் பெரும் திரளான தோட்ட மக்கள் உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டார்கள். இதன் போது மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள்¸ பாடசாலை பிரச்சினைகள்¸ தொழிவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கபட்டது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுவாக சப்ரகமுவ மாகாணத்தில் எண்ணெய் பெரும் நோக்கில் “பாம்” மரம் வளர்க்கப்படுகின்றது. இந்த மரம் வளர்ப்பதினால் பாம்புகள் அதிகரிக்கின்றன. அதனால் இதை தடை செய்யுமாறு மக்கள் கோருகின்றனர். இதற்காகவே அன்மையில் நான் மலேசியாவில் வெற்றிகரமாக முன்னெத்து செல்லபடும் இந்த திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கு அது வெற்றிகரமாக செயற்படுத்தபட்டு வருகின்றது. அதற்கான புதிய தொழில்நுட்டபங்களை அவர்கள் அறிமுகம் செற்து வருகின்றார்கள். அதனை இங்கு அறிமுகம் செய்தால் வெற்றி அடையலாம். பாம் மரம் வளர்ப்பதன் ஊடாக எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கின்றது. புதிய வியாபார சந்தையும் அறிமுகமாகின்றது. பாம் மரத்தின் கனிகளை உண்பதற்காகவே எலிகள் உருவாகியுள்ளன. இந்த எலிகளை உண்பதற்காக பாம்புகள் அதிகரிக்கின்றன. இதனாலயே பாம்புகளுக்கு மக்கள் பயப்படுகின்றனர். மலேசியாவில் இந்த உற்பத்திகளில் ஈடுபடும் மக்கள் பாம்புகள் குறித்து பயப்படுவதில்லை. பாம்புகளை கட்டுபடுத்த  மருந்துகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணம் மேல் மாகாணத்தின் சில பகுதிகள் பொருத்தமானதாக காணப்படுகின்றது. ஏனைய மாகாணங்களிலும் இதனை பரீட்சிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். அதேபோல் அன்னாசி விவசாயம் போன்ற விவசாய நடவடிக்கைகளையும் மேற் கொள்லளாம்.
இன்றைய நடமாடும் சேவையில் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை என்னிடம் முன் வைத்தனர். குறிப்பாக வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் தற்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களின் பத்து லட்ச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பத்திரிக்கையில் வரும் வர்த்தமானிகளை பெற்று விண்ணப்பிக்கவும். வேண்டும். வேலைவாய்ப்புகள் அரசதுறையில் மாத்திரம் எதிர்பார்க்க முடியாது தனியார்துறையிலும் விண்ணபிக்கவேண்டும்.
சிலர் பாடசாலைகளின் அபிவிருத்தி, பிள்ளைகளின் கல்வி தொடர்பில் என்னிடம் வினவினர். தற்போதய நல்லாட்சி அரசாங்கத்தின் கல்விக்காக 83 பில்லியன் ரூபா ஒதுக்கபட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதன்படி மலையகத்திலும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இச்செயற்திட்டத்தில் இப்பிரதேச பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
தகவலும் படங்களும்:- பா.திருஞானம்
unnamed (3)
unnamed (4)
unnamed (5)
SHARE