பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்

244

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவியே கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 11.30 அளவில் குறித்த மாணவி வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், அவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்னர்.

SHARE