பெற்றோர்களே கட்டாயம் இதை படிக்கவும்….

165

குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.

பல சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில், எத்தனை தடைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை கட்டாயம் கற்றுக் கொடுத்தாக வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை

குறும்புகள் அதிகம் உள்ள குழந்தைகள் அதிகமாக சேட்டைகள் செய்யும். எனவே அந்த குழந்தைகளிடம் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் டீச்சர் அடிப்பாங்க என்று அவர்களை பயம் காட்டக் கூடாது. ஏனெனில் பள்ளிக்கு சென்றால் டீச்சர்கள் நம்மை துன்புறுத்துவார்கள் என்று குழந்தைகளின் மனதில் தோன்றும்.

குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடித்து மிரட்டாமல், எந்த பாடம் புரியவில்லை என்று கேட்டு அவர்களுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்களை தவிர வேற்று நபர்களிடம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் போட்டிகள் போடும் போது, அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில், தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களை பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பள்ளி செல்லும் போது, அவர்களின் பையில், நமது வீட்டின் விலாசம், தொலைபேசி நம்பர் உள்ள கார்டை மறக்காமல் வைக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் காணாமல் போய்விட்டால், அந்த கார்ட் பயன்படும்.

பெற்றோர்களை தவிர முகம் தெரியாத வேறு நபர்கள் யாரேனும் அழைத்தால், அவர்களுடன் போக கூடாது என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தங்க நகைகளை அதிகமாக போட்டு அனுப்பக் கூடாது. ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் அதில் இருந்து தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் சண்டை போடாமல் அன்பாகவும், நட்பாகவும் பழக வேண்டும் என்பதை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

– See more at: http://www.manithan.com/news/20170307125537#sthash.m2Eykdsh.dpuf

SHARE