பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை ராஜபக்ஷ குடும்பமே அழித்தது : சம்பிக்க ரணவக்க:-

384

 

 

மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்­காக நிலக்­கரி இறக்­கு­மதி செய்யும் உரி­மை யை கசினோ சூதாட்­டக்­கா­ர­ருக்கு வழங்கி அதன் மூலம் பெற்­றுக்­கொண்ட லஞ்சப் பணத்தில் தான் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் மகன்மார் செய்­ம­தி­களை விண்­ணு க்கு அனுப்பி வைத்­தனர் எனக் குற்றம் சாட்டும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தை ராஜ­பக்ஷ குடும்­பமே அழித்­தது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ராக நிய­மனம் பெற்ற ரொஷான் குண­ரத்ன நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொலன்­னா­வையில் உள்ள அலு­வ­ல­கத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தனது கடமை­களை பொறுப்­பேற்றார். இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மின்­சக்தி மற்றும் எரி­சக்தி அமைச்சர் சம்­பிக ரண­வக்க இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் என்­றதும் மக்கள் மனதில் அது ஊழல் மோச­டிகள் நிறைந்த நிறு­வ­ன­மென்ற நினைப்பே மேலெ­ழு­கின்­றது.
வாக­னங்­க­ளி­லி­ருந்து எரி­பொ­ருட்­களை திரு­டு­வது, வாக­னங்­களை சொந்தத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வது, எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களை வழங்­கும்­போது லஞ்சம் வாங்­கு­வது போன்ற செயல்கள் தொடர்­பி­லேயே மக்கள் மத்­தி யில் பேசப்­படும். ஆனால் இதற்கு மேலான பயங்­க­ர­மான மறு­பக்கம் இக் கூட்­டுத்­தா­ப­னத்தில் உள்­ளது. இது மக்­க­ளுக்கு தெரி­யாது. எரி­பொ­ருட்கள், நிலக்­கரி, கேஸ் கொள்­வ­னவு செய்யும் போது பாரிய மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன.
2011 ஆம் ஆண்டில் கூட்­டுத்­தா­ப­னத்தின் நிர்­வாகம் ஐந்து தட­வைகள் எரி­பொ­ருட்­களை எமக்கு வழங்­க­வில்லை. எரி­பொருள் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­னார்கள். செலவை அதி­க­ரித்­தனர். பல­கோடி ரூபாய்­களை கொள்­ளை­ய­டித்­தனர்.
இது­தொ­டர்­பாக பல தட­வைகள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் முறை­யிட்டோம். ஆனால் இதனை தடுக்க எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
எரி­வாயு மூலம் ஒவ்­வொரு தொன்­னுக்கும் 15 டொலர் மேல­தி­க­மாக பெற்றுக் கொள்­ளப்­பட்­டது.
நிலக்­கரி கொள்­வ­ன­வுக்­கான கேள்வி கோரல்கள் ஒரு போதும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.இதனை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான உரிமை கசினோ சூதாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.
இத­னூ­டாக பெற்றுக் கொண்ட பணம் மூலமே ஜனா­தி­பதி மஹிந்­தவின் பிள்­ளைகள் விண்­வெ­ளிக்கு செயற்கை கோள்­களை அனுப்­பி­னார்கள்.இனிமேல் இவ்­வா­றான ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்க மாட்டோம். தரா­தரம் பார்க்­காது தண்­டனை வழங்­கப்­படும்.
இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் நஷ்­ட­ம­டையும் நிறு­வ­ன­மல்ல. ஆனால் அதனை பணம் வீணாகும் நிறு வனமாக காண்பித்தனர்.ஆனால் உண்மை அதுவல்ல. ராஜபக் ஷ வின் ஆட்சியின் செலவுக்காக பணத்தை பெற்றுக் கொள்வதற்கே இந்நிறுவனம் சின்னாபின்னமாக்கப்பட்டது என்றார். இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.
SHARE