பெற்ற மகளை மிருகத்தனமாக கற்பழித்த தந்தை மீது 626 வழக்கு

229

மலேசியாவில் கடந்த 7 மாதங்களாக பெற்ற மகளை கற்பழித்ததாக தந்தை மீது சுமார் 626 வழக்குகள் பதியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தந்தை குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அவருக்கு 12,000 வருடம் சிறைதண்டனை விதிக்கப்படும் என வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடன் விவாகரத்தான நபர், தனது 15 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனிமையை பயன்படுத்திய தந்தை பெற்ற மகளை தினமும் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த கொடூரத்தை அறிந்த தாய், பொலிசிடம் புகார் அளிக்க 36 வயதான தந்தை மீது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 626 வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், 599 வழக்கு இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக பதியப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக வழக்கு விவரங்களை படித்த நீதிமன்றம், தந்தை மீதான குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளது.

குற்றத்தை மறுத்த தந்தை, பிணை கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போது வழக்கின் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், குற்றங்கள் அனைத்தும் நிரூபணமானால் தந்தைக்கு 12,000 வருட சிறைதண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE