ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலைய கேமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.
படத்தில் வலது பக்கத்தில் இருப்பவன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவனை தேடும் பணி நடைபெற்று வருவதாகம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணி என்ன? BBC
பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்துள்ள தொடர் குண்டு தாக்குதல்களில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறம்படும் பகுதியில் முதல் குண்டு வெடித்துள்ளது.
மக்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடத் தொடங்கியபோது, இரண்டாவது பெரிய குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
தற்கொலை குண்டுதாரி இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதல்கள் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூன்றாவது வெடிப்பு பிரஸ்ஸல்ஸின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு அருகே உள்ள இந்த ரயில் நிலையத்தில் காலை ஜனநெரிசல் மிக்க நேரத்தில் தாக்குதல் நடந்துள்ளது
- பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 3 குண்டுவெடிப்புகளில் 27 பேர் பலி
- பாரீஸ் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
- பெல்ஜியம் குண்டு தாக்குதல் மேலும் 15பேர் பலி- இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை