புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ் வண்டியொன்றை பின் நோக்கி எடுத்த போது, பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் அதில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, குறித்த பெண் பலியாகியுள்ளார்.
இவர் எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவராகும்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி மற்றும் அதன் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்