இளைய தளபதி விஜய் எப்போதும் எந்த விஷயத்திலும் உடனே முடிவெடுக்க மாட்டார். சில நாட்கள் யோசித்த பிறகு தான் பேச ஆரம்பிப்பார்.
இந்நிலையில் விஜய் நடித்த பைரவா படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததாக கூறப்பட்டது, 4 நாட்களில் ரூ 100 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள்.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்த விநியோகஸ்தர்கள் பல நாட்கள் கழித்து சமீபத்தில் இப்படம் ஓடவில்லை, வசூல் இல்லை நஷ்ட ஈடு வேண்டும் என ஒரு சிலர் கேட்கின்றனர்.
ஆனால், படக்குழு இதை மறுத்து வருகின்றது, படத்திற்கு நல்ல வசூல் வந்துள்ளது என கூறுகின்றது, மேலும், இன்று பைரவா 50வது நாளை கடக்கின்றது.
வசூல் மழையில் பைரவா என்று தான் 50வது நாள் விளம்பரமே கொடுத்துள்ளனர். இதன் மூலம் படம் நஷ்டம் என்று கூறிவந்த விநியோகஸ்தர்களுக்கு படக்குழு பதிலடி தந்துள்ளது.