எல்லோரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கும் பேட்ட படம் வரும் ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்துடன் மோதுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்டியுள்ளார்கள். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்கள் இணைவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் திரிஷாவுக்கு முன் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தது மீரா மிதுன் தானாம். சின்ன நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம்.
மீரா தானா சேர்ந்த கூட்டம், கிரகணம், 8 தோட்டாக்கள் படங்களில் நடித்திருப்பதோடு நகைக்கடை விளம்பரத்தில் மிக கவர்ச்சியாக நடித்தவர்.