பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை

230

பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது தனது பெண் பிள்ளையின் நலன் கருதி தாய் குறித்த பிள்ளையை பதுளை ஹாலிஎல பகுதியில் உள்ள தனது அப்பாவிடம் (சிறுமியின் தாத்தா) ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

சந்தேக நபரான 71 வயதுடைய முதியோர் தனது பாதுகாப்பில் வைத்திருந்த 11 வயதான தனது பேத்தியை சுமார் ஒன்றரை வருடம் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியிலுள்ள தனது வீட்டில் இவ்வாறு இந்த நாசகார வேலையைச் செய்து வந்துள்ளார். இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்றரை வருடத்தின் பின் சுகயீனம் காரமணாக நாடு திரும்பிய குறித்த தாய் தனது பிள்ளை இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பிள்ளையின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தாய் தனது பிள்ளையை அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான பொகவந்தலாவ பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளில் மாற்றங்கள் இருப்பதை கண்டுகொண்ட தாய், மகளிடம் கேட்டபோது, பிள்ளை எதுவும் கூறவில்லை. இதனையடுத்து தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்த போது வைத்தியசாலையின் வைத்தியரிடம் குறித்த சிறுமி தாத்தா தனக்கு செய்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாய் 22.01.2016 அன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதியாகியிருப்பதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார். எனினும் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக சகல ஆவணங்களையும் சேகரித்துள்ளதாகவும் சம்மந்தப்படட சந்தேக நபரான 71 வயது தாத்தாவை கைது செய்வதற்காக ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேஷி தர்மபிரிய தெரிவித்தார். (க.கிஷாந்தன்)

Child_Abuse_Eli_story

 

SHARE