‘பேய்கள் உலாவிவரும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் இராது’ – அமைச்சர் ஹாரிசனின் கோமாளிப்பேச்சு

212

வடமாகாணத்திற்கென பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வடமாகாணத்தில் வாழும் மக்களுக்கு பயன்மிக்கதாக அமையவேண்டும்.

mawai

‘பேய்கள் உலாவிவரும் இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் இராது’ என அமைச்சர் ஹாரிசன் கூறியிருப்பது வவுனியாவின் ஓமந்தை வாழ் பிரதேச மக்களையா? எனவும் வினாக்கள் எழுகின்றன. ஓமந்தையின் பெருமைகளை அறிந்திராத ஹாரிசன் பொறுப்பற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துக்களைக் கூறுவதை தன்மானமுள்ள தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருகாலத்தில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த வன்னி குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் இன்று எவ்வாறு காட்சியளிக்கிறது. தரைமட்டமாக, சுடுகாடாக காணப்பட்ட வன்னி நிலப்பரப்பு எவ்வாறு இன்று வளர்ச்சிபெற்றிருக்கிறது. த.தே.கூட்டமைப்பையும், வடமாகாண சபையையும் பிளபடுத்தும் நோக்கிலேயே அமைச்சர் ஹாரிசனின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இதன் பின்னணியில் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எனப் பலர் செயற்படும் விதங்கள் தமிழ் மக்களுக்கு ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கப்போகின்றது. த.தே.கூட்டமைப்பையும், வடமாகாண சபையையும் பிளவுபடுத்திவிட்டால் அது அரசிற்கு மாபெரும் வெற்றியாக அமையும். அத்தகையதொரு செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவே அமைச்சர் ஹாரிசனின் கூற்று அமைந்துள்ளது. இவ்விடயந்தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள், த.தே.கூட்டமைப்பு, வடமாகாணசபை என அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வினை மேற்கொண்டு, அமைச்சர் ஹாரிசனின் முகத்திற்குக் கரியினைப்பூசவேண்டும். ‘பேய்கள் எங்கு உலாவுகிறது’ என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

 

SHARE