பேராசிரியர் டக்ளஸ் காஸல்க்கு அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான உயரிய விருது!

354

அமெரிக்காவின் நொட்டடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் காஸல்க்கு கொலம்பியா நாட்டின் ஜனாதிபதியினால் அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான விருது ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (7) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் கொலம்பிய நாட்டில் நடைபெற்ற நீண்ட கால யுத்தத்தின்போது அமெரிக்கா அரசு சார்பாக அந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அந்த நாட்டுக்கிடையில் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் காரணமாக பேச்சு வார்த்தையின்போது கொலம்பியா நாட்டில் அமைதியான சூழ் நிலை ஏற்பட்டதுடன், 50 வருட கால போராட்டம் என்பது அமைதியான முறைக்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த நாட்டுக்கான அமைத்திப் பேச்சு வார்த்தைக்கும் அந்நாட்டின் அமைதி சமாதனத்துக்கமாக முன்னின்று உழைத்த பேராசிரியர் டக்ளஸ் காஸல் அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்நாட்டில், நடைபெற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்ட போர் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் என்ற அடிப்படையில் குற்றங்களை ஒப்புக் கொண்ட குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனைகளும், ஏனைய குற்றவாளிகளுக்கு நீண்ட கால தண்டனைகள் வழங்கும் பொருட்டு கொம்பியா நாட்டில் அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களை அமுல்படுத்தும் முகமாக வாங்கீன்மூன் மற்றும் அமெரிக்காவின் வெளிவிகார அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு கைச்சாத்திட்டிருந்தனர்.

நொட்டடான் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் காஸல் அமெரிக்கா நாட்டின் அமைதி தூதுவராக பணியாற்றிக் கொண்டிப்பதுடன் மனித உரிமை ஆலோசகர் மற்றும் அமெரிக்காவின் அனைத்து பல்கலைகழத்திற்குமான பேராசிரியராகவும், பல நாடுகளுக்குரிய சமானத்துக்கான சட்டத்துறை சார்ந்த ஆலோசகர்களாகவும் கடமையாற்றுகின்றார்.

நொட்டடான் பல்கலைகழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் டக்ளஸ் காஸல் அவர்களிடத்தில் சட்டத்துறை மற்றும் மனித உரிமை தொடர்பான கற்கை மாணவனாக தற்பொழுது மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் மன்றில் கடமையாற்றும் நீதவன் மா.கணேசராசர் என்பது குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

SHARE