பேரினவாத அரசு அரசியல் யாப்பு விடையத்தை தானாக உடைத்து தனது முகத்தை சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் எதிர்வுகூறல்

194

இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை 2009 மே மாதம் 18ம் திகதி வரை தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன் எடுத்த விடுதலைப்புலிகள் தங்களது ஆயதப் போராட்டத்தினை மௌனித்ததன் பின்னர.; காலத்தின் கட்டாயம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து ஐனநாயக ரீதியில் ஈழத்தமிழர் விடுதலையை முன் எடுத்து செல்வதும் தமிழர்களுக்கான வடகிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயகௌரவுத்துடன் வாழக்கூடிய விதத்தில் ஒரு சுயாட்சியை நோக்கிய ஒரு கொள்கையை முன்வைத்து இந்த நகர்வினை முன் எடுத்து வருகின்றோம்.

 இவ் இடத்தில் தற்பொழுது உள்ள நிலமை என்னவென்றால் அந்த அடிப்படையில் தான் பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு என்ற ஒன்று முன்வைக்கப்படுவதற்கான சகல நகர்வுகளும் எடுக்கப்பட்டிருந்தது இது சும்மா வந்த விடையம் அல்ல ஐநாசபையால் கேட்டுக்கொண்டதுக்கு  இணங்க அதில் இலங்கை அரசினை கேட்டுகொள்ளப்பட்ட பல விடையங்களில் சமூக சக வாழ்வு இலங்கையில்  சம உரிமையுடன் சகல மக்களும் அனுபவிக்கூடிய விதத்தில் ஒரு அரசியல் தீர்வினை எட்டவேண்டும் என்ற முறையில்  வழங்கப்பட்ட ஒரு ஆலேசணைக்கு அமைவாகத்தான் இந்த நகர்வுகள் எடுத்துவரப்படுகின்றன.

.
எனவே இந்த விடயத்தினை முன் எடுத்து அரசாங்கம் வரும்பொழுது தமிழ்தேசிய கூட்டமைப்பு அதை அனுசரித்து  அந்த சர்வதேசத்தின் ஆனையின் கீழ் அனுசரித்து செல்லவேன்டிய தேவை இருக்கின்றது.

அந்த அடிப்படையில் அதை உடைத்துவிட்டு ஒரேயடியாக வெளியே வரவேண்டும் என்ற கூக்குரல்கள் எழுந்தவண்ணமாக இருக்கின்றன ஆனால்  தமிழ் தேசிய கூட்டமைப்பை பெறுத்த வரை  தமிழர்களுக்கான அங்கிகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு! ஆகையால் மற்றவர்களைப்போல்  எடுத்தபாட்டில் தூக்கி எறிந்து விட்டு வெளியே வர முடியாது.

 வெளியே வந்துவிட்டால் அடுத்தது என்ன என்பதையும் சிந்தித்து கொண்டுதான்  செயல்பட வேண்டிய தேவை இருக்கின்ற படியால் தான் அந்த அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. நிச்சயமாக ஜநா சபையின் இரண்டு வருட கால எல்லை மிக விரைவில் முடிய இருக்கின்றது. அந்த எல்லை வரை நாம் பெறுமையினை கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றேம்.

 நாமாக  இந்த அரசியல்  நகர்வுகளை குழப்பிவிட்டு வெளியே வந்தவர்களான குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எற்றுகொள்ள தயாராக இல்லை அதனால்தான் நாங்கள் எங்களினுடைய நகர்வுகளினை மென்மையான போக்கில் கடைப்பிடித்து வருகின்றோம்.

  
.
இதை தூக்கி எறிந்து விட்டு வெளியில் வரவேண்டும் என கூக்குரல் இடுபவர்கள்  வெளியே வந்து என்ன செய்யபோகிறார்கள் என கூறியதாக நான் கேள்விப்படவும் இல்லை.  எனவே அந்த அடிப்படையில் தான் இந்த அரசியல் நகர்வுகளை செய்து கொண்டு வருகின்றோம். அதற்காக இந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் விருப்புக்களை முழுமையாக ஏற்று ஒரு காலமும் செயல்பட்டதாக இல்லை எடுக்கப்பட்ட சகல ஒப்பந்தங்களும் மீறப்பட்டிருக்கின்றன.

.
கடந்த காலங்களில் விடுதலைதலை புலிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களும் முறிக்கப்பட்டுள்ளன, அதே போல் தந்தை செல்வாவுக்கும் பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டுள்ளன, அந்த வகையில்  இப்பொழுது உள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அவர்களாகவே உடைத்தெறிவார்கள் ஆனால் அதற்கான பதிலையும் அவர்கள் சர்வதேசத்திற்கு கூறவேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்படும்.

அதுவரை எமது நகர்வுகள் இடம்பெறும். என 13.06.2018 நடைபெற்ற வன்னி முரசம் பத்திரிகையின் மூன்றாவது வெளியீட்டு நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி;.சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடதக்கது.

SHARE