பேருவளை கடற்கரையில் பாரிய அளவிலான திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
மாகல்கந்த பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று காலை இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடற்கரையில் அதிகமான துர்நாற்றம் வீசியமையினால் மக்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியிருந்ததனை அவதானித்துள்ளனர்.
எனினும் இதுவரையிலும் பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.