இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தின் மேற்பார்கையில் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர், பயிற்றுநர்கள் சங்கத்துடன் இணைந்து இந்தத் தன்னார்வ அமைப்பு இப் போட்டிகளை நடத்துகின்றது.
பேருவளை கல்வி வலயத்துக்குட்பட்ட அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் இப் போட்டிகளுக்கு மைலோ மூன்றாவது தடவையாக பிரதான அனுசரணை வழங்குவதுடன் டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன.
14, 16, 18 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இருபாலாருக்கும் போட்டிகள் நடத்தப்படும். 12 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய தூர ஓட்டப் போட்டிகள் நடத்தப்படும்.
மேல் மாகாண கல்வித் திணைக்களம், களுத்துறை கல்வி வலயம், பேருவளை பிரிவு கல்வி அலுவலகங்கள் என்பன இப் போட்டிகளை அங்கீகரித்துள்ளன