பேருவளை சம்பவம் இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது

462

பேரு­வளை – பன்­னில பகு­தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குண­சேகர  தெரி­வித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலாக்கான முங்­ஹேன பகு­தியைச் சேர்ந்த 26 வய­தான இளைஞர் பயணித்த மோட்டார் சைக்­கிளைத் திரு­டு­வ­தற்­காக துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட  ரி–56 ரக  துப்­பாக்கி, 27 தோட்­டாக்­க­ளுடன் கூடிய மெகஸின், துப்­பாக்கிச் சூட்டை நடத்த வந்த கார் மற்றும் திரு­டப்­பட்ட மோட்டார் சைக்கிள் என்­பன சந்­தே­க­ந­பர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE