பேருவளை பன்னில பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஐந்து இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
26 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றிரவு பேருவளை, பன்னில பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது இனந்தெரியாதோர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனால் படுகாயமடைந்த இளைஞன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்களை கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.