சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள், ஓய்வுதியகாலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள், 55 அகவைக்கு மேற்பட்டவர்கள் உடல்நலம் பேணல்தொடர்பான ஆலோசனைகள் 10.03.2017 அன்று 9.30 மணிமுதல் 12.00 மணிவரை தமிழ்மொழியில் இடம் பெறவுள்ளது.
கரிதாசு (Caritas) நிறுவனமும், செஞ்சிலுவைச்சங்கமும் (Schweizerisches Rotes Kreuz) வயோதிபர்களுக்கான அமைப்பு (Pro Senectute) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து ஓய்வூதிய கால நலன்களை தமிழ்மக்களுக்கு வழங்கி வருகின்றன.
இதற்கு முன்னர் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஓய்வூதியம் பெறும்வழிமுறைகள் தொடர்பாகவும் பயண அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கான பயண அனுமதி அட்டை பெறும்வழிகள், பயணத்திற்கான பணவசதி அற்றவர்களுக்கான பயணப்பண உதவிகள் பெறுதல், வதிவிடத்தில் அன்றாடப் பயணத்திற்கான மாதாந்த பயணச்சீட்டு என்பன பெறுதல் போன்ற திட்டங்களை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் இனிவருங்காலங்களில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான உடல்நலம் பேணும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இத்திட்டங்களுக்கான உதவிகளை இந்நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பாளராக நந்தினி முருகவேள் இணையர் அவர்களை இவ்அமைப்புக்கள் (Caritas,Prosenectute, Schweizerische Rotes Kreuz) பேர்ண் மாநிலத்திற்கு பொறுப்பாளராக நிமித்துள்ளார்கள்.
இத்தகைய உதவிகளை பெற்றுக்கொள்ள நந்தினி முருகவேள் இணையர் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம். இந்த ஆலோசனைகள் அனைத்தும் இலவசமானவை ஆகும்.
தொடர்புகளுக்கு: 079 397 3877
பணிமனை முகவரி: Wangenstr 102. 3018 Bern.