சமூக சேவை நோக்குடன் பேஸ்புக் நிறுவனத்தினால் நிதி திரட்டும் சேவை கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இச் சேவையின் ஊடாக தற்போது வரை சுமார் 1 பில்லியன் டொலர் நிதி சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமிருந்து 19 வரையான நாடுகளில் வசிக்கம் 20 மில்லியன் வரையானவர்கள் இச் சேவைக்கு நிதி உதவி செய்துள்ளனர்.
இச் சேவையானது நண்பர்களுக்கு நிதி உதவி தேவைப்படும்போதும் வேறெந்த ஒரு இணையத் தளத்திற்கு விஜயம் செய்யாமல் பேஸ்புக்கில் இருந்தவாறே திரட்டிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக செயற்படும் இச் சேவையை அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கும் விஸ்தரிப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.