அல்ஜீரியாவில் குழந்தையின் உயிருடன் விளையாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
1000 லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவேன் என பேஸ்புக்கில் படம் பதிவிட்டு மிரட்டல் விடுத்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்து “1000 லைக்ஸ் வரவில்லையெனில் கீழே போட்டுவிடுவேன்” என அக்குழந்தையின் உறவுக்கார நபர் பேஸ்புக்கில் புகைப்படம் பதிந்துள்ளார்.
இந்த பதிவால் தூண்டப்பட்ட மற்ற சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் குழந்தையிடம் துஷ்பிரயோகம் செய்வது போல நடந்து கொண்டவரை கைது செய்ய வேண்டும் என்று கோரினர்.
இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.