போர்த்துக்கலில் காட்டுத் தீ

135

போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சுமார் 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்ட்ரா – காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ யானது காற்றின் வேகத்தினால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் 700 தீயணைப்பு படையினர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உலங்குவானூர்திகளின் உதவியுடனும் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மலையடிவாரங்களில் வசிக்கும் சுமார் 350 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோல் தீப்பிடித்த பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டில் வசித்து வந்த 47 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE