பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஜினாமா

406

 

இளம் சமூகத்தினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற செயலியாக  டிக்டொக் செயலி காணப்படுகின்றது.

சீன செயலியான இது கடந்த 2016-ஆம் தொடங்கப்பட்டதோடு இச்  செயலி அறிமுகம் செய்யப்பட்ட ஒரே வருடத்திலேயே பல முன்னணி செயலிகளுக்கு போட்டியாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  இச் செயலியின் வெற்றிக்குக் காரணமான அதன் உரிமையாளரும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஸாங் யிமிங்  (Zhang Yiming)  தலைமை நிர்வாக அதிகாரி என்ற பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்குப் பதிலாக   அந் நிறுவனத்தின், மனிதவளத் தலைவரான லியாங் ரூபோ (Liang Rubo) பதவியேற்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE