பைரவா படத்தின் தகவல் கசிந்தது : இதெல்லாம் செய்கின்றாரா விஜய்

253

 

 

பரதன் இயக்கத்தில் அடுத்த வருடம் 12 தேதி வெளியாகும் படம்தான் பைரவா. விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.

பைரவா விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கதாபாத்திரத்தில் கிராமத்தவர் போலவும் மற்றொரு கதாபாத்திரத்தில் நகரத்து பையன் போலவும் நடிக்கின்றாராம்.

இரு கதாபாத்திரங்களுக்கும் மாறுபட்ட வித்தியாசமான கெட்டப் போட்டுள்ள விஜய், வித்தியாசமான முறையில் குரலும் கொடுத்துள்ளாராம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வைத்துள்ள மரியாதையால் விஜய் இசை வெளியீட்டுவிழாவை ரத்து செய்துள்ளார்.

வரும் 20ம் தேதி இசை வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE