பொகவந்தலாவவையில் சம்பள உயர்வை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்

324
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கை சாத்திட்ட தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற ஏழு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ளன.

இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்தில் பல்வேறு இடங்களில் அண்மைக்காலமாக போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE