ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி 10ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியை வைத்து பொகவந்தலாவ நகரில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று 05.10.2016 அதாவது இன்றையதினம் நடைபெறுகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நகர மத்தியில் அமர்ந்து கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
சம்மேளத்தினால் அறிவிக்கப்பட்ட 730 ரூபாய் வேண்டாம், ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வே வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கெதிராக சவப்பெட்டியை நகர மத்தியில் வைத்து ஒப்பாரி வைத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொகவந்தலாவ நகர வர்த்தக நிலையங்கள் முடப்பட்டுள்ளதுடன் அட்டன் பலாங்கொடை பாதையின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்