வைத்தியசாலையில் காலவதியான சமையல் உணவு பொருட்கள் மீட்பு
நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமசந்திரன்
வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக வைத்திருந்த பழுதடைந்த உணவு பொருட்களை ஒருதொகையை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது
பொகவந்தலா வைத்தியாசாலையில் 18.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை
பொகவந்தலா பிரதேச சுகாதார பரிசோதர் பி.கே.வசந்த அவர்களினால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போதே பயறு மற்றும் பழுதடைந்த முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது
புழுக்களுடன் சமையலுக்கு உதவாத நிலையில் ஆறு கிலோகிராம் பயறு மற்றும் 30 பழுதடைந்த முட்டைகளுமே மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட பொருட்களுடன் பொகவந்தலா வைத்தியசாலைக்கு உணவு பொருட்களை வினியோகிக்கும் நாவலபிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகருக்கு எதிரராக வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்வுள்ளதாக சுகாதார பரிசோதகர் பி.கே வசந்த தெரிவித்தார்



