பொங்கல் தினத்தில் எட்டு படங்கள் ரிலீஸ

200

201609051300461539_vijay-bairavaa-final-leg-shooting-start-in-pollachi_secvpf

வரும் பொங்கல் தினத்தில் இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ உள்பட 7 படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது 8வது படமாக விஜய்சேதுபதி நடித்த படம் ஒன்றும் வெளியாகவுள்ளது. இதனால் எந்த வருடமும் இல்லாத வகையில் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பொங்கல் போட்டியில் இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’, சூர்யாவின் ‘எஸ் 3, ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’, கலையரசனின் ‘அதே கண்கள்’, அருண்விஜய்யின் ‘குற்றம் 23’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, நகைச்சுவை படமான ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய 7 படங்களுடன் தற்போது விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படமும் இணைந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ள ‘புரியாத புதிர்’ படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி, உள்பட பலர் நடித்துள்ளனர். சைக்காலஜீக்கல் த்ரில்லர் படமான இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். ரெபல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

பொங்கலுக்கு எட்டு படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒருசில படங்கள் பின்வாங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE