தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய ரிலிஸ் என்றால் அது பொங்கலும், தீபாவளியும் தான்.
பொங்கலில் ரிலீஸ் செய்தால் தான் பெரிய படங்கள் வசூல் வேட்டையாட எளிதில் வாய்ப்புள்ளது. அந்த வகையில் இம்முறை பொங்கலுக்கு 5 படங்கள் ரிலிஸ் என்று அறிவித்துள்ளனர்.
விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், பாலாவின் தாரை தப்பட்டை ஆகிய படங்களோடு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த ரஜினிமுருகனும் களமிறங்குகிறது.
அரண்மனை2 பொங்கல் ரேசில் இருந்து விலகி ஜனவரி 29ம் தேதி ரிலிசாகவுள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கெத்துகளத்தில் குதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 750 திரையரங்கில் முக்கியமான 5 படங்கள் ரிலிசானால் அனைவரும் போட்ட பணத்தை ஒரு வாரத்தில் கடினமான சூழ்நிலைதான்.
கடைசி நேரத்தில் எந்த படங்கள் பொங்கல் ரேசில் களமிறங்கும், பின்வாங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.