‘பொண்டாட்டிடா’ நெகிழ்ந்து போன வித்யா!! தீயாகும் செய்தி….

249

‘கபாலி’ வசனத்தை மாற்றிப் பேசி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்ட வித்யாவின் வீடியோவுக்கு ரஜினி பாராட்டு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. இப்படத்தின் முதலில் ரஜினி பேசும் ஒரு நீளமான வசனமுண்டு. அதனைத் தான் டீஸராகவும் வெளியிட்டார்கள்.

ரஜினி பேசிய வசனத்தை “பொண்டாட்டினா தளதளனு புடவையை கட்டிக்கொண்டு, தலை நிறைய பூ வச்சுக்கிட்டு, நெற்றி நிறைய பொட்டு வச்சுக்கிட்டு “ஏய் பொண்டாட்டி” என கூப்பிட்டால் குடுகுடுனு ஒடிவந்து காலை புடித்துக் கொண்டு சொல்லுங்க அத்தான் அப்படினு கேட்பாளே அந்த மாதிரி பொண்டாட்டினு நினைச்சுயாடா! பொண்டாட்டிடா” என்று மாற்றிப் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டார் வித்யா.

அந்த வீடியோ பதிவு, சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது. மேலும், அந்த வீடியோவை கிண்டல் செய்தும் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவில் ரஜினி இருக்கும் போதே, வித்யா பேசிய வீடியோவை காட்டியிருக்கிறார்கள். அப்போது வித்யாவின் வசன உச்சரிப்பை வெகுவாக ரசித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டு சென்றவுடன் இந்த பெண்ணைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி சென்னை திரும்பியவுடன், பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்தார்கள். அதனைத் தொடர்ந்து வித்யா குறித்து விசாரித்திருக்கிறார். உடனே சிங்கப்பூரில் இருந்து ரஜினியைப் பார்க்க வந்திருக்கிறார் வித்யா.

வித்யாவை வெகுவாக பாராட்டிய ரஜினி “எப்படி எப்படி உங்களுக்கு இந்த ஐடியா வந்தது. வீட்டில் என்ன சொன்னாங்க” என்று கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் ரஜினி. சுமார் அரை மணி நேரம் அந்த வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் குடும்ப பின்னணி உள்ளிட்ட பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டுள்ளார் ரஜினி. ரஜினியின் பாராட்டால் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கிறார் வித்யா.rajnividya

SHARE