சுதந்திரக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (22.09.2023) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த தடையை எதிர்வரும் ( 06.10.2023) ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சதுன் விதான உத்தரவிட்டுள்ளார்.