பொதுச் சுவரில் கிறுக்கிய பிரித்தானிய மற்றும் கனேடிய சுற்றுலாப் பயணிகள் கைது!

137
வடக்கு தாய்லாந்தில் உள்ள வாடி வீட்டின் சுவர் பகுதியில் காழ்ப்புணர்ச்சியுடன் நிற தௌிப்பைக் கொண்டு கிறுக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஃபர்லோங் லீ மற்றும் கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி ஸ்கெனிடர் ஆகிய 23 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவு நேரத்தில் பொதுச் சுவரில் கிறுக்கும் காட்சி சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

அவர்கள் இந்த விடயத்தில் குற்றவாளியாக காணப்பட்டால் 10 வருடங்கள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷியாங்க் மாய் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முக்கியமான சுற்றுலா பகுதியாக கருதப்படும் பழைய நகரத்தின் தா ஃபே நுழைவாயில் மற்றும் வாடி வீடு என்பவற்றின் பொதுச் சுவரில் சிவப்பு நிறத்திலான வண்ணத்தில் தௌிப்பு ஓவியம் வரைந்ததாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், அந்த நேரத்தில் சற்று மதுபோதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற விசாரணையின் போது அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தாய்லாந்து நாணய பெறுமதியில் ஒரு மில்லியன் பாத் ($30,656) அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE