பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு அருகில் புண்ணாக்குடன் ஆர்ப்பாட்டம்

100

 

மக்கள் போராட்டத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வந்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வௌியிட்ட கருத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்கு வருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காததால் வீதிக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் அங்கு ஒரு புண்ணாக்கு வாளியையும் கொண்டு வந்து வீதியில் வைத்து தங்கள் எதிர்ப்பை வௌியிட்டனர்.

 

SHARE