தமிழரசு கட்சியின் உறுப்புனராகவும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அனந்தி, தமிழரசு கட்சியிடம் வேட்பாளர் நியமனம் கேட்காமல், ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் ஆசனம் கேட்டுள்ளார். இதன்படி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்குள் செய்யப்பட்ட உடன்படிக்கை காரணமாக அதனை வழங்கவில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்றய தினம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் அனந்தி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் மாலை 4 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், எதிர்வரும் 13 ம் திகதி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க இம்முறையும் பல சுயேட்சை குழுக்கள் களமிறங்கும் நிலையில் அனந்தியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.