பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரக் மௌலவி பரபரப்பு குற்றச்சாட்டுவாதிகளுக்குமிடையில் தொடர்பு! முபார

246

 

பொதுபல சேனாவுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ள வேண்டியிப்பதாக முபாரக் மௌலவி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

மேலும், இன்னும் ஒரு வருடத்தில் ஐ எஸ் இலங்கையை தாக்கும் என பொதுபல சேனாவின் செயலாளர் ஞானாசார தேரர் தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கும் ஐ எஸ் அமைப்புக்குமிடையில் இரகசிய தொடர்பு ஏதும் இருக்கின்றதா என்பதை அரசு ஆராய வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தலிபான், அல்கைதா இருப்பதாக சிங்கள இனவாதிகள் சிலர் தெரிவித்தனர். இப்போது அது மறைந்து போய் தற்போது சர்வதேச பிரபல்யம் வாய்ந்த ஐ எஸ் இலங்கையிலும் உள்ளதாக கற்பனை கதைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கு இருப்பதாக சொல்லப்பட்ட அல்கைதா, தலிபான் உறுப்பினர் எவரும் இது வரை இராணுவத்தால் கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் அக்கருத்துக்கள் பொய்யானவை, அபாண்டமானவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டன.

தற்போது ஐ எஸ் கதையை பொதுபல சேனா அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை மதுரசாக்களில் தீவிரவாதம் கற்பிப்பதாக பொது பல சேனா சொல்வது இது முதல் முறையல்ல. ஒரு பொய்யை திரும்பத்திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்ற நாஸிகளின் கோட்பாட்டை அவர் பின்பற்றுவதாக தெரிகிறது.

இவ்வாறு இலங்கை மதுரசாக்களில் தீவிரவாதம் கற்பிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே நாம் மறுத்துள்ளதுடன் அதனை நிரூபிக்க முடியுமா என பொது பல சேனாவுக்கு சவால் விட்டிருந்தோம். இலங்கையின் எந்தவொரு மதுரசாவிலும் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதில்லை என்பதுடன் பெரும்பாலும் அடித்தாலும் அடிவாங்கிக்கொண்டு மௌனமாக இரு என்றுதான் இங்கு கற்பிக்கப்படுகிறது.

அதன் காரணமாகத்தான் இலங்கை உலமாக்கள் தமது உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகக்கூட போராட முடியாத கோழைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆயுத தீவிரம் மத்ரசாக்களில் உள்ளதாக சொல்வது மிகப் பெரிய நகைச்சுவையாகும்.

அத்துடன் இன்னும் ஒரு வருடத்தில் இலங்கையை ஐ எஸ் தாக்கும் என தேரர் சொல்வதன் மூலம் அவருக்கும் ஐ எஸ்ஸுக்கும் இரகசிய தொடர்பு இருக்கின்றதா என்பதை அரச புலணாய்வுத்துறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஐ எஸ் இவ்வாறு பகிரங்கமாக இதுவரை கூறாமல் இருக்க எப்படி இவர் கூறுகிறார் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

சில வேளை இன்னும் ஒரு வருடத்தில் யாரையாவது கூலிக்கு வாங்கி அவர்கள் மூலம் தாக்குதலை ஏற்படுத்தி ஐ எஸ் மீது பழி போட்டு விட்டு இதோ நாம் சொன்னது போன்று நடந்து விட்டது என சொல்வதற்கான சதி ஏதும் பொதுபல சேனாவினால் நடக்கின்றதா என்பதையும் அரசு உடனடியாக ஆராய வேண்டும்.

சதாம் ஹுசைனின் ஆட்சியில் ஓரளவு அமைதியாக இருந்த ஈராக் மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் இணைந்து படையெடுத்ததன் காரணமாகவே இன்று ஐஸ்; போன்ற தீவிரவாத அமைப்புக்கள் உருவாகி முழு சர்வதேசமும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியிருப்பதன் காரணம் என்பதை இப்போது முழு உலகும் எற்றுக் கொண்டுள்ளது.

அதே போல் பொது பல சேனா போன்ற பௌத்த தீவிரவாத இயக்கங்களின் இனவாத செயற்பாடுகளால் விரக்தியற்று ஐ எஸ் அமைப்புக்களில் இலங்கை மக்கள் எவரும் சேர்ந்தால் அதற்குரிய முழு பொறுப்பையும் பொது பல சேனா போன்ற பௌத்த தீவிரவாதிகளே பொறுப்பேற்க வேண்டுமே தவிர இதற்கு இலங்கை முஸ்லிம்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை தெரிவிக்கிறோம்.

இத்தகையதொரு நிலை ஏற்படக்கூடாது என்பதில் உலமா கட்சி அக்கறையாக இருப்பதுடன் நாட்டில் சகல இனங்களையும் நேசிக்கும் நல்ல பல பௌத்த சமயத்தலைவர்கள் இருப்பதால் அவர்கள் இதற்கு இடமளிக்க மாட்டார்கள் எனவும் நம்புகிறோம்.

அதே போல் பொது பல சேனாவின் இத்தகைய கற்பனைகளையும், பொய்களையும் பகிரங்கமாக கண்டிக்க பௌத்த சமய தலைவர்களும் அரசியல்வாதிகளும் முனவர வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

SHARE