பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்

330
இலங்கையில் படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்.

உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் அல்லது விடுமுறை எடுக்காமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள், முறையாக இராணுவத்தை விட்டு விலகிக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2ம் திகதி முதல் 5ம் திகதி வரையில் இவ்வாறு படையினர் விலகிக் கொண்டுள்ளனர்.

பதவி விலகுதவற்காக இராணுவத்திற்குச் சென்ற 1619 பேரில், 1239 பேர் வந்த தினத்திலேயே பதவி விலகிக் கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 16ம் திகதி வரையில் இந்தப் பொது மன்னிப்புக்காலம் அமுலில் இருக்கும்.

புத்தாண்டுக்கு முன்னதாக பதவி விலகி, சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாடுமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவிர தெரிவித்துள்ளார்.

பதவி விலக வரும் இராணுவ வீரர்கள் ஆவணங்களுடன் வங்கி கணக்கு விபரங்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

SHARE