பொன்னையாவிடம் எமது கட்சி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் கோரிக்கை

205

பொன்னையா என்ற நபரிடம் எமது கட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலமே டக்ளஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னையா என்பவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது “ஈ.பி.டீ.பி கட்சி மற்றும் இராணுவத்தினர்களால் செய்யப்பட்ட யுத்த குற்ற மீறல்கள் தொடர்பான தகவல்கள் தனக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளதாகவும், எனவே குறித்த நபர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயுமாறு தெரிவித்தே டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினராக இருந்தபோது ஊழல் மோசடி காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவரே பொன்னையா என்ற நபராவார்.

இவர் தற்போது யாழ் உதயன் ரெஸ்ட் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமது கட்சி மீது பொன்னையா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும், இதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

devanada-1

SHARE