பொய் மேல் பொய் : மங்களவின் உரை குறித்து ஜெனீவாவில் தமிழர் பிரதிநிதிகள் கருத்து !!

262

 

manivannanஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பொய்மேல் பொய் சொல்லியுள்ளார் என தமிழர் பிரதிநிதிகள் ஜெனீவாவில் தெரிவித்துள்ளனர். கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் அமர்வில், சிறிலங்காவின் வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றியிருந்தார்.
அனைத்துலக சமூகத்தினை மீண்டும் மீண்டும் ஏமாற்றுகின்ற வகையில், சிறிலங்கா பொய்மேல் பொய்களை சபையில் அடுக்கி இருந்ததாக கருத்து தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மணிவண்ணன், இந்த தைரியம் சிறிலங்காவுக்கு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவின் வார்த்தைகள் அனைத்துலக சமூகத்துக்கு இனிப்பாக இருந்திருக்காலம் என கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் தமிழ் மனித உரிமைகள் மையத்தின் பிரதிநிதி கிருபாகரன், தமிழ் மக்களுக்கு இது எந்த நம்பிக்கையினையையும் தரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தன்மீதான அழுத்தங்களை தணிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசத்தினை மறைமுகமாக கேட்டிருப்பதையே மங்களவின் உரை உணர்த்துவதாக ஜெனீவாவில் தமிழர் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

SHARE